அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்


அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

image

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணி தகுதி பெற்று விட்டது.

பங்களாதேஷின் மிர்பூரில் இன்று நடைபெற்ற முதலாவது காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 43.3 ஓவரில் 112 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. சந்தர்பால் மட்டுமே அதிகபட்சமாக 44 ரன் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சர்வான் 24 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால், வெஸ்ட் இண்டீஸ் மிகக் குறைந்த ஸ்கோரையை சேர்க்க முடிந்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும், ஹபீஸ், அஜ்மால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உமர் குல், ரஸாக் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.

இதையடுத்து, 113 ரன் என்ற எளிதான வெற்றி இலக்குடன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் காம்ரன் அக்மால், ஹபீஸ் சயீத் இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி, 20.6 ஓவரிலேயே 113 ரன் எடுத்து தங்கள் அணி அரையிறுதிப் போட்டிக்குள் முன்னேற வழி வகுத்தனர். ஹபீஸ் 61 ரன்னும், அக்மால் 37 ரன்னும் சேர்த்தனர். ஹபீஸ் ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

வியாழனன்று நடைபெறவுள்ள 2-வது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் பாகிஸ்தான் அணி அரையிறுதிப் போட்டியில் மோதும்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)