இங்கிலாந்தை வீழ்த்தி ஜெர்மனி இறுதிக்குத் தகுதி


இங்கிலாந்தை வீழ்த்தி ஜெர்மனி இறுதிக்குத் தகுதி

image

புதுடெல்லியில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகளில் வியாழனன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது நடப்பு சாம்பியன் ஜெர்மனி. இதன்மூலம் 3-வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பு ஜெர்மனிக்கு கிடைத்துள்ளது.

நேற்றைய ஆட்டத்தின் முதல் பாதியில், ஜெர்மனி 3-1 என்ற கோல்கணக்கில் முன்னிலையில் இருந்தது. 6-வது, 11-வது, 31-வது நிமிடங்களில் ஜெர்மனி வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்தனர்.

பிற்பாதியில் 60வது நிமிடத்தில் ஜெர்மனியின் லினஸ் பட் மேலும் ஒரு கோல் அடித்தார். மாறாக இங்கிலாந்து அணியின் ரிச்சர்டு ஸ்மித் 19வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்ததால், அந்த அணி அரையிறுதியில் தோல்வியைத் தழுவியது.

மற்றொரு அரையிறுதியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியாவுடன் ஜெர்மனி இறுதிப் போட்டியில் மோதுகிறது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)