இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்து
மும்பை: உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மும்பையில் நேற்று விருந்து அளித்து கௌரவித்தார். இந்திய அணியினருடன் பிரதீபா பாட்டீல் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன்பின்னர் உலகக்கோப்பை என்பது இந்தியாவைப் பொறுத்தமட்டில் கனவாகவே அமைந்தது. இடையில் 2003-ம் ஆண்டு இறுதிப்போட்டி வரை இந்தியா முன்னேறினாலும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப்போனது. அதன்பின்னர் நமக்கு வாய்ப்பு இல்லாமல் போனாலும் இந்த ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றி விடும் என நாட்டின் 121 கோடி மக்களும் வைத்திருந்த நம்பிக்கை வீண்போகவில்லை.
எம்.எஸ். தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மும்பை வாங்கடே மைதானத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்தப் போட்டியை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நேரில் கண்டு மகிழ்ந்தார். இந்திய அணி, குழுவாகப் பணியாற்றி பிரமிக்கத்தக்க அளவு செயல்பட்டு, இலங்கையை வீழ்த்தி உலகக்கோப்பையைக் கைப்பற்றியதில் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, இந்திய வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், வீரர்களுக்கு மும்பையில் விருந்தும் அளித்தார்.
மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவருடன் அம்மாநில ஆளுநர் சங்கர நாராயணன், முதல்வர் பிருதிவிராஜ் சவான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு அளிக்கப்பட்ட முதல் விருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

