இந்திய கிரிக்கெட் வீரர்கள் 6 பேருக்கு நோட்டீஸ்


இந்திய கிரிக்கெட் வீரர்கள் 6 பேருக்கு நோட்டீஸ்

மேற்கிந்தியத் தீவுகளில் மதுபான விடுதியில் ரகளையில் ஈடுபட்ட யுவராஜ் சிங்,​​ ஜாகீர் கான்,​​ நெஹ்ரா,​​ ரவீந்திர ஜடஜா,​​ ரோஹித் சர்மா,​​ பியூஷ் சாவ்லா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

பிசிசிஐ செயலாளர் என்.​ சீனிவாசன்,​​ செவ்வாய்க்கிழமை ​(இன்று)​ 4 வீரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.​ ​ ​ ​

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தை விதிகளை அறிமுகப்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ​(பிசிசிஐ)​ பரிசீலித்து வருகிறது.

மும்பையில் திங்கள்கிழமை பிசிசிஐ கூட்டம் நடைபெற்றது.​ இதில் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்ற இந்திய அணியின் மேலாளர் ரன்ஜிப் பிஸ்வால் கலந்து கொண்டார்.​ சுமார் 45 நிமிஷங்கள் இந்த கூட்டம் நடைபெற்றது.

20-20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து தான் ஏற்கெனவே அளித்த அறிக்கை குறித்து பிஸ்வால் அப்போது விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது.

போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்த தங்களது அதிருப்தியை பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகர் மற்றும் நிர்வாகிகள் வெளிப்படுத்தினர்.

இந்தத் தோல்விக்கு கேப்டன் தோனி மீது எவ்வித குற்றச்சாட்டையையும் கூற முடியாது.​ அவர் அணியை சரியாக ஒருங்கிணைத்துச் சென்றார் என்று அணியின் மேலாளர் பிஸ்வால் கூறியுள்ளார்.

அப்போது மேற்கிந்தியத் தீவுகளில் மதுபான விடுதியில் இந்திய வீரர்கள் யுவராஜ் சிங்,​​ ஜாகீர் கான்,​​ நெஹ்ரா,​​ ரவீந்திர ஜடஜா,​​ ரோஹித் சர்மா,​​ பியூஷ் சாவ்லா ஆகியோர் ரசிகர்களுடன் தகராறில் ஈடுபட்டது குறித்தும்,​​ முழு உடல் தகுதி இல்லாத சில வீரர்கள் ​(யுவராஜ் சிங்,​​ ரோஹித் சர்மா)​ ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

எதிர்காலத்தில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க வீரர்களுக்கு நடத்தை விதிகளை அறிமுகப்படுத்துவது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.​ இது தொடர்பான முழுவிவரங்கள் விரைவில் வெளிவரும்.

முன்னதாக உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் இலங்கை அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது .​ இதனால் போட்டியிலிருந்தும் வெளியேறியது.

ஆனால் அன்று இரவே கிராஸ் ஐலெட் தீவில் உள்ள புகழ்பெற்ற டகீலா ஜோஸ் பாருக்கு இந்திய வீரர்கள் 6 பேர் சென்றுள்ளனர்.

அப்போது பாரில் இருந்த ரசிகர்கள் சிலர்,​​ இந்திய அணியின் தோல்வி குறித்து வீரர்களிடம் கேள்வி எழுப்பினர்.​ இதனால் வீரர்களுக்கும்,​​ ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.​ அப்போது ரசிகர்கள் வீரர்களை வசைமாரி பொழிந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜாகீர் கான் மற்றும் ஆஷிஸ் நெஹ்ரா ஆகிய இருவரும் ரசிகர்களுடன் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது ​ ஹர்பஜன் சிங்,​​ ரோஹித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.​

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)