இந்திய ஹாக்கி அணியில் மீண்டும் சந்தீப் சிங்


இந்திய ஹாக்கி அணியில் மீண்டும் சந்தீப் சிங்

உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டிகளில் இந்தியாவின் தோல்வியைத் தொடர்ந்து, இந்திய ஹாக்கி அணியில் இருந்து நீக்கப்பட்ட சந்தீப் சிங், அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐரோப்பிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

காயம் காரணமாக ஷிவேந்திர சிங், அர்ஜூன் ஹாலப்பா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 2 முதல் 4-ம் தேதி வரை ஜெர்மனியில் நடைபெறும் 4 நாடுகள் ஹம்பர்க் மாஸ்டர்ஸ் போட்டிகளிலும், பெல்ஜியத்தில் நடைபெறும் ஹாக்கி டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கும் என்று இந்திய ஹாக்கி சங்கம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

4 நாடுகள் போட்டிகளில் இந்தியா, ஜெர்மனி தவிர, நெதர்லாந்து, ஜப்பான் அணிகளும் பங்கேற்கின்றன. டெஸ்ட் தொடரில் பிரான்ஸ், ஹாலந்து அணிகளுடன் இந்தியா மோதும்.

ராஜ்பால் சிங் தலைமையிலான இந்திய அணியில் 22 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)