இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா இந்தியா


இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா இந்தியா

image

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மொகாலியில் புதன்கிழமையன்று உலகக் கோப்பை கிரிக்கெட் 2-வது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

இரு நாடுகளின் பிரதமர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இப்போட்டியைக் காண மொகாலி வரவிருப்பதால், போட்டி நடைபெறும் மைதானம் தீவிர பாதுகாப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இதுவரை இல்லாத வகையில் ராணுவத்தினரும் மொகாலியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஏற்கனவே நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் ஒரு முறைகூட இந்தியாவை பாகிஸ்தான் அணி வென்றதில்லை என்பதோடு, சொந்த மண்ணில் விளையாட இருப்பதால், இந்திய அணியினர் உற்சாகமாக களமிறங்கி தங்கள் அணிக்கு வெற்றி தேடித் தருவார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரிலேயே வேறு எந்த போட்டிக்கும் இதுபோன்ற ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

மொகாலியில் நடைபெறவிருக்கும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை வெல்வோம் என்று பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி கூறியுள்ளார். 

இந்திய வீரர்கள் ஊடக மிகைப்படுத்துதலுக்கு செவிசாய்க்காமல், தங்கள் திறமை மீது நம்பிக்கை கொண்டு விளையாடினாலே வெற்றி பெற்று விடலாம் என்று இந்திய கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

மொகாலி கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் ஏற்கனவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இலங்கை அணி விளையாடும், இறுதிப்போட்டி வரும் 2ஆம் தேதி நடைபெறுகிறது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)