இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றி
இலங்கை அணி வெற்றி டுவென்டி-20 உலககோப்பை லீக் போட்டியில், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குரூப் \'பி\' பிரிவில் இடம் பெற்ற இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் சங்ககரா பேட்டிங் தேர்வு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, 173 ரன்கள் எடுத்தது. ஒரு ஓவர் மட்டும் வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் ஒரு மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.அதனால் ஆட்டம் டக்-வொர்த் லீவிஸ் முறைக்கு மாற்றப்பட்டது. ஜிம்பாப்வே அணியின் வெற்றி இலக்கு, 11 ஓவர்களுக்கு 104 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 5 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. முடிவில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி டுவென்டி-20 உலககோப்பை லீக் போட்டியில், டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி 8 விக்கெட் வித்தியாசத்தில், வெஸ்ட் இண்டீஸ் \'திரில்\' வெற்றி பெற்றது. குரூப் \'டி\' பிரிவில் இடம் பெற்ற இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ல் பீல்டிங் தேர்வு செய்தார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, 191 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, கெய்ல் அதிரடி துவக்கம் தந்தார். இவருக்கு சந்தர்பால் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். 2. 2 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் மழை குறுக்கிட ஆட்டம் பாதிப்புக்கு உள்ளானது. சுமார் 1 மணி 30 நிமிடம் தடைபட்ட ஆட்டம், மீண்டும் துவங்கியது. வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி, 6 ஓவருக்கு 60 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியோ 5.5 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

