இலங்கை மீனவர்கள் 15 பேர் விடுதலை


இலங்கை மீனவர்கள் 15 பேர் விடுதலை

இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி கைது கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, 15 இலங்கை மீனவர்களை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக சிறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய கடல் பகுதியில், அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி கடந்த 23-ம் தேதியன்று இலங்கை மீனவர்கள் 15 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர். அவர்கள் வந்த 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து 15 மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)