உயர் கல்வி உதவித்தொகை - கிவ் லைஃப் வழங்கியது


உயர் கல்வி உதவித்தொகை - கிவ் லைஃப் வழங்கியது

image

சென்னை: ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு கல்விக்கட்டணம், சீருடை, புத்தகங்கள், காலை உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கி வரும் கிவ் லைஃப் தொண்டு நிறுவனம், மாணவர்களின் உயர் கல்விக்கான கட்டணங்களையும் வழங்கியுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் சுமார் 8 ஆயிரம் ஏழைக் குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை அளித்துள்ளது. இதனால் அவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதுடன் அவர்கள் ஏழ்மை நிலையில் இருந்து மீள வழி கிடைத்துள்ளது.

அந்த வரிசையில் லயோலா கல்லூரியின் அவுட் ரீச் துறையுடன் இணைந்து கிவ் லைஃப் நிறுவனம் மாணவ-மாணவிகளின் உயர் கல்விக்கான உதவித்தொகையை சென்னையில் இன்று வழங்கியது.

மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பட்டயப் படிப்புகளைப் பயிலும் 274 மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகையை ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், கிவ் லைஃப் நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலருமான அகிலா ஸ்ரீனிவாசன் வழங்கினார்.

சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் குடிசைகளில் வாழும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ் மையம் நிறுவனரும், கிவ் லைஃப் அறங்காவலருமான ஜெகத் கஸ்பார், லயோலா கல்லூரி முதல்வர் பி. ஜெயராஜ், அவுட் ரீச் துறையின் ஜோசப் அந்தோணி சாமி, ஓரியண்டல் குஸன்ஸ் நிர்வாக இயக்குனர் மகாதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாணவ-மாணவிகள் தங்களின் உயர் கல்வியைத் தொடர்ந்து படிக்கும் வகையில் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)