உலகக்கோப்பை ஹாக்கி: இறுதிக்குள் நுழைந்தது ஆஸி.


உலகக்கோப்பை ஹாக்கி: இறுதிக்குள் நுழைந்தது ஆஸி.

புதுடெல்லியில் நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டிகளில், நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல்கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழந்தது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா, ஜெர்மனியை எதிர்த்து விளையாடும்.

நேற்றைய போட்டியின் 55-வது நிமிடம் வரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல்கணக்கில் முன்னணி வகித்தது. என்றாலும் 58-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி ஒரு கோல் போட்டது. ஆனால் அந்த அணியால் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியவில்லை.

உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டிகள் முழுவதும் ஆஸ்திரேலியா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி 4-1 என்ற கோல்கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், அந்த அணியுடன் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியை எதிர்கொள்கிறது.

ஏற்கனவே 2002, 2006-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜெர்மனி தற்போது 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கலாம்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)