உலகக்கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி


உலகக்கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி

image

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி முன்னேறியுள்ளது. கொழும்பில் செவ்வாயன்று இரவு முடிவடைந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் அந்த அணி, நியூஸிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி, 48.5 ஓவரில் 217 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஸ்டைரிஸ் அதிகபட்சமாக 57 ரன் எடுத்தார். குப்தில் 39 ரன்னும், டெய்லர் 36 ரன்னும் சேர்த்தனர். மற்றவர்கள் பெரிய அள்வில் ரன் சேர்க்காததால், அந்த அணி 217 ரன்னுடன் திருப்தியடைய வேண்டியதாயிற்று. இலங்கை பந்து வீச்சாளர்கள் மலிங்கா, மெண்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். முரளிதரன் 2 விக்கெட்டையும், ஹெராத், தில்ஷான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.

218 ரன் வெற்றி இலக்குடன் பின்னர் களமிறங்கி விளையாடிய இலங்கை அணி 47.5  ஓவரிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன் சேர்த்து வெற்றி பெற்றது.

தில்ஷான் அபாரமாக ஆடி 73 ரன் குவித்தார். கேப்டன் சங்ககாரா 54 ரன்னும், தரங்கா 30 ரன்னும் சேர்த்தனர். டிம் சுத் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். வெட்டோரி, மெக்கே தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இலங்கை அணி வரும் 2ஆம் தேதியன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், 2-வது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)