உலகக் கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி


உலகக் கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில், பெங்களூருவில் இன்று நடைபெற்ற பி பிரிவு ஆட்டத்தில், அயர்லாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது இந்தியா.

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கும், அதிரடி ஆட்டக்காரர் யூசுப் பதானும் சிறப்பாக விளையாடி ரன் குவித்தனர்.

அயர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த அயர்லாந்து 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன் சேர்த்தது.

208 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் வீரேந்திர சேவாக் 5 ரன்னுக்கும், சச்சின் டெண்டுல்கர் 38 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கவுதம் காம்பீர் 10 ரன்னில் வெளியேற, விராட் கோலி 34 ரன் குவித்தார்.

யுவராஜ் சிங் 50 ரன்னும், யூசுப் பதான் 30 ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேப்டன் தோனி 34 ரன் எடுத்திருந்த போது டாக்ரெல் பந்தில் எல்.பி. டபிள்யூ ஆகி வெளியேறினார்.

இந்தியா 46 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 210 ரன் சேர்த்து வெற்றிபெற்றது. இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 50 ரன் குவித்த யுவராஜ் சிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)