ஒச்சாயி திரைப்படத்திற்கு வரி விலக்கு


ஒச்சாயி திரைப்படத்திற்கு வரி விலக்கு

image

ஒச்சாயி என்ற வார்த்தைக்கு தமிழ் அகராதியில் பொருள் இல்லை என்று கூறி, அந்த திரைப்படத்தின் வரி விலக்கு கோரும் விண்ணப்பத்தை திருப்பி அனுப்பிய தமிழக அரசு, பத்திரிகைகள், எழுத்தாளர்களிடம் இருந்து எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்தத் திரைப்படத்துக்கு வரி விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆச்சி கிழவி திரைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் புதுமுகங்கள் தயா, தாமரை நடித்துள்ள படம் ஒச்சாயி. அறிமுக இயக்குநர் ஆசைத்தம்பி இப்படத்தை இயக்கியுள்ளார்.

அக்டோபர் 15-ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் தமிழகமெங்கும் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஒச்சாயி தமிழ் வார்த்தை இல்லை என்றும், தமிழ் அகராதியில் அதற்கென எந்த அர்த்தமும் இல்லை என்றும் கூறி வரி விலக்கு மறுக்கப்பட்டது. இதற்கு, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஒச்சாயி தூய தமிழ் வார்த்தை என்றும், அதற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். சில பத்திரிகைகளும் இதைச் சுட்டிக்காட்டின. இந்த நிலையில் ஒச்சாயி படத்துக்கு வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.Sa

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)