காதலர் குடியிருப்பு - உண்மைச் சம்பவம்


காதலர் குடியிருப்பு - உண்மைச் சம்பவம்

image

மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு, திரையுலகினர் உள்பட பல தரப்பினராலும் பாராட்டப்பட்ட சயனைடு (தமிழில் குப்பி) படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கியுள்ள படம் காதலர் குடியிருப்பு.

இந்தப் படத்துக்கு முதலில் \"காவலர் குடியிருப்பு\' எனப் பெயரிடப்பட்டிருந்தது. வியாபார காரணங்களால் காதலர் குடியிருப்பு என மாற்றப்பட்டுள்ளது.

புதுமுகங்கள் அனீஷ் தேஜஸ்வர், ஸ்ருதி ஆகியோருடன் சரண்யா, திலீப் ராஜ், அவினாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் ரிலீஸ் பணிகளில் பிஸியாக இருந்த இயக்குநர் கூறியதாவது:

நாட்டில் நடக்கும் பல கலவரங்கள், ஏராளமான குடும்பங்களைச் சிதைத்து பல உயிர்களைப் பலி கொண்டிருக்கின்றன. பலரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அனுப்பியிருக்கின்றன.
அப்படிப்பட்ட ஒரு கலவரத்தின்போது இணையும் ஒரு காதல் ஜோடி கால வெள்ளத்தில் எப்படியெல்லாம் இழுத்துச் செல்லப்பட்டது என்பதை நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறேன். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஒரு காவலர் குடியிருப்பில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

கதை 1968, 1992, 2010 என மூன்று கால கட்டங்களில் நடைபெறுவதால் அந்தந்த கால கட்டத்தைப் பிரித்துக் காட்ட மூன்று தனித்தனி வண்ணங்களில் ஒளிப்பதிவு செய்திருக்கிறோம்.
சுப்ரமணியபுரம், பசங்க வரிசையில் சிறப்பான இசையை வழங்கியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன். படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ஒரு கட் கூட தராமல் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ரசிகர்களின் ரசனையை மேம்படுத்தும் பல விஷயங்கள் இந்தப் படத்தில் உள்ளன. ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வருகிறது என்று கூறினார் இயக்குனர் ரமேஷ்.

பாடல்கள் - நா.முத்துக்குமார், யுகபாரதி. ஒளிப்பதிவு - துவாரகநாத். படத்தொகுப்பு - ஆண்டனி. தயாரிப்பு - வஷிஸ்டா பிக்சர்ஸ் இந்துமதி.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)