காதல் இல்லாத தமிழ்ப் படம்


காதல் இல்லாத தமிழ்ப் படம்


புதுமுகங்களின் நடிப்பில் வெற்றி பெற்ற எதார்த்தமான திரைப்படங்களின், வரிசையில் மற்றொரு படமாக உருவாகியிருக்கும் படம் \\\'குறுநில மன்னன்\\\'.

எந்த வகையான திரைப்படமாக இருந்தாலும் அதில் காதல் இல்லாமல் இருப்பதில்லை. அந்த ஃபார்மூலாவை மாற்றி, காதல் இல்லாத கதையாக \\\'குறுநில மன்னன்\\\' படத்தின் கதையை எழுதிய ர.முருகையா, அதை தயாரிப்பாளரிடம் சொல்ல, உடனே முருகையாவை இயக்குநர் நாற்காலில் அமரவைத்துள்ளார் தயாரிப்பாளர் நிஷா கென்னடி.

காதலை மட்டுமல்ல வேறு எந்த செயற்கை தனத்தையும் சேர்க்காமல் மண்ணின் மனிதர்களின் கதையாக உருவாகியுள்ள இப்படம் காரைக்குடி அருகிலுள்ள பகுதியில் நடக்கும் படம். இதன் படப்பிடிப்பு காரைக்குடி, சிவகங்கையைச் சுற்றியுள்ள சுற்று வட்டாரங்களில் நடைப்பெற்றுள்ளது.

இப்படத்தின் இயல்பு நிலை மாறாமல் இருக்க, படத்தில் நடிக்கும் அத்தனை நடிகர்களையும் புதியவர்களாகவே தேர்வுச் செய்துள்ளார் இயக்குநர். படத்தின் நாயகன் பிரதீப், இசையருவி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றியவர். நாயகி வித்யா, \\\'பருத்திவீரன்\\\', செந்தி முக்கிய வேடத்தில் நடிக்க, கூத்துப்பட்டறை கலைஞர் ஜெகத், வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தில் வரும் பல பாத்திரங்களில் கிராமத்து மக்கள், நாடகக் கலைஞர்கள், தெருக்கூத்துக் கலைஞர்கள் என்று சினிமா வாடை இல்லாதவர்களை நடிக்க வைத்துள்ளனர்.மனதளவில் தன்னை ஒரு ராஜாவாகவும், சுற்றத்தை ஒரு ராஜ்ஜியமாகவும் நினைத்து வாழும் ஒருவனின் கதை தான் இந்த \\\'குறுநில மன்னன்\\\'.


   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)