காலே டெஸ்ட்: முரளிதரன் 800 விக்கெட்; இலங்கை வெற்றி


காலே டெஸ்ட்: முரளிதரன் 800 விக்கெட்; இலங்கை வெற்றி

image

காலேயில் நடைபெற்ற இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் பிரக்யான் ஓஜா-வின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தார்.

காலே டெஸ்டில் மட்டும் முரளிதரன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 132 போட்டிகளில் பங்கேற்றிருந்த அவர், 792 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். நேற்று நிறைவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் 800வது விக்கெட்டை வீழ்த்திய கையோடு கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)