கிரிக்கெட் வீரர் ஆசிப்புடன் தொடர்பில்லை-நீத்து சந்திரா


கிரிக்கெட் வீரர் ஆசிப்புடன் தொடர்பில்லை-நீத்து சந்திரா

image

மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது ஆசிப்புடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று பிரபல இந்தி நடிகை நீத்து சந்திரா கூறி்யுள்ளார்.

சூதாட்டம் தொடர்பாக ஸ்காட்லாந்து போலீசார் தயாரித்த அறிக்கையில், முகம்மது ஆசிப்பும் நீ்த்து சந்திராவும் கடந்த 2009ஆம் ஆண்டு தொலைபேசியில் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகின.

இதை நீத்து சந்திரா மறுத்துள்ளார். தனக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது என்றும், தனது பெயர் தேவையில்லாமல் சூதாட்டப் பிரச்னையில் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அவை அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீத்து சந்திராவின் அறிக்கையை அவரது செய்தித்தொடர்பாளர் டேல் பக்வகார் இன்று மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்தார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)