கொல்கத்தா அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி


கொல்கத்தா அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி

image

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 17 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் கொல்கத்தா அணியை பேட் செய்யக் கேட்டுக் கொண்டதையடுத்து அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன் சேர்த்தது.

பின்னர் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால், அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

கொல்கத்தா அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

டெல்லி அணிக்கு இது 5-வது தோல்வியாகும்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)