கொழும்பு டெஸ்ட்: இலங்கை வலுவான தொடக்கம்


கொழும்பு டெஸ்ட்: இலங்கை வலுவான தொடக்கம்

கொழும்பு: கொழும்பில் திங்களன்று தொடங்கிய இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று இலங்கை அணி சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாசில் வென்று முதலில் பேட் செய்து வரும் இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன் குவித்துள்ளது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பரனவிதானா 100 ரன்கள் எடுத்து இஷாந்த் சர்மா பந்தில் போல்டு ஆனார். தில்ஷான் 54 ரன்கள் எடுத்து ஓஜா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். சங்ககாரா 130 ரன்களுடனும், ஜெயவர்த்தனே 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)