கோவா போட்டி ரத்து: தொடரை வென்றது இந்தியா
கோவாவில் ஞாயிறன்று நடைபெறவிருந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆடுகளத்தில் ஈரப்பதம் காரணமாக கைவிடப்பட்டதால், ஒருநாள் போட்டித் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.
கொச்சி முதலாவது ஒருநாள் போட்டி தொடர் மழையால் கைவிடப்பட்ட நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதற்கிடையே கோவாவில் கடந்த சில நாட்களாக பெய்த கன ம்ழையால் 3-வது ஒருநாள் போட்டி நடைபெறவிருந்த கிரிக்கெட் மைதானத்தில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்ற முயற்சி செய்தாலும், வீரர்கள் விளையாடுவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவவில்லை என்று நடுவர்கள் அறிவித்ததால், கோவா போட்டியும் ரத்து செய்யப்பட்டது. இதனால், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி வென்றது. 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரையும் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது. |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

