சட்டப் பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் 6 பேர் சஸ்பெண்ட்


சட்டப் பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் 6 பேர் சஸ்பெண்ட்

சட்டப் பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் ஆறு பேர் இரண்டு நாள்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி மீது புதன்கிழமை உரிமை மீறல் பிரச்னையைக் கொண்டு வந்தார் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்.

இந்தப் பிரச்னை பற்றிப் பேச அதிமுக உறுப்பினர்கள் அனுமதி கோரினர். இதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார். தமது மீதான உரிமைப் பிரச்னையை உரிமைக் குழுவுக்கு அனுப்ப முதல்வர் கருணாநிதி ஒப்புக் கொண்டார்.

அதன் பின்பும், அதிமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக் கேட்டு தொடர்ந்து கோஷமிட்டனர். அப்போது, அடுத்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேச உறுப்பினர்களை பேரவைத் தலைவர் அழைத்தார்.

ஆனால், தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அவையில் நின்று கொண்டு, கூச்சலிட்டனர். அதிமுக உறுப்பினர்களில் சிலர், பேரவைத் தலைவர் ஒழிக என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.

உடனடியாக குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, ஒழிக என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்ற உறுப்பினர்களின் பெயர்களையெல்லாம் அவைத் தலைவர் அறிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இதைத் தொடர்ந்து, ஒழிக என கோஷமிட்ட அதிமுக உறுப்பினர்கள் செந்தில் பாலாஜி, கோ.அரி, செ.ம.வேலுசாமி, டி.ஜெயக்குமார்,

வி.பி.கலைராஜன், சேலம் எல்.ரவிச்சந்திரன் ஆகியோரை புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு தினங்களுக்கு பேரவை நிகழ்வுகளில் இருந்து நீக்கி வைக்கும் தீர்மானத்தை அவை முன்னவர் க.அன்பழகன் கொண்டு வந்தார்.

குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், ஆறு உறுப்பினர்களும் பேரவை நிகழ்வுகளில் இரண்டு நாள்களுக்கு பங்கேற்க முடியாது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)