சமூக அவலங்களுக்கு குரல் கொடுக்கும் இளம் இயக்குனர்


சமூக அவலங்களுக்கு குரல் கொடுக்கும் இளம் இயக்குனர்

சமூக பிரச்னைகளை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தாலும் வித்தியாசமான கோணத்தில் விறுவிறுப்பான படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் இளம் இயக்குனர் அனீஷ்.

 

23 வயதே ஆகும் அனீஷ் இதற்கு முன்பு அடங்காமை, அட்டூழியம் என சமூக அவலங்களுக்கு குரல் கொடுக்கும் குறும்படங்களை இயக்கிய அனுபவத்துடன் பெரிய திரைக்குள் நுழைந்திருக்கிறார்.

 

இவர் தற்போது இயக்கி வரும் புதிய படம் ஆதிக்கம். இப்படத்தில் தாதாக்கள் மற்றும் ரவுடியிசத்தை கதைக்களமாக எடுத்திருக்கும் அனீ்ஷ்... அதனை வித்தியாசமாக காட்டப் போகிறாராம்.

 

ரவுடி கதை படங்களில் எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்பாவிகள் வன்முறையை கையில் எடுப்பதுபோலதான் காலம் காலமாக தமிழ் சினிமாவில் காட்டி வருகிறார்கள். ஆனால் ஆதிக்கம் படத்தில் ரவுடிகள் இஷ்டப்பட்டுத்தான் வன்முறையை தேர்வு செய்கிறார்கள் என்பதை உணர்த்தப் போவதாக கூறுகிறார் அனீஷ்.

 

இதற்கு ஏற்ற வகையில், ரவுடி கூட்டத்தில் சேரும் அப்பாவி வளர்ந்து தாதாவாகி, எம்.எல்.ஏ.வாகவும் ஆகி, அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வளர்ந்து, பிறகு என்ன நடக்கிறது என்பதை கதையாக அமைத்திருக்கிறாராம்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)