சாய்னா நேவாலுக்கு மக்களவையில் பாராட்டு
ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பட்டம் வென்ற இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு நாடாளுமன்ற மக்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மக்களவைத் தலைவர் மீராகுமார் தனது உரையில், தனது தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக பரிமளித்து வருகிறார் சாய்னா. இந்த ஆண்டில் சாய்னா வெல்லும் நான்காவது சர்வதேச பட்டம் இதுவாகும். இந்த அவையில் உள்ள உறுப்பினர்களின் சார்பாக சாய்னாவுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துகொள்கிறேன். அவரது சாதனைகள் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதுடன், வளரும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் உள்ளது. இதே போன்று சாய்னா எதிர்காலத்திலும் தொடர்ந்து பல சாதனைகள் புரிய வாழ்த்துகள் என்று தெரிவித்தார். அவரது பேச்சை ஆமோதிக்கும் வண்ணம் மக்களவை உறுப்பினர்கள் மேசையைத் தட்டி தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஞாயிறன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், சாய்னா சீன வீராங்கனை ஷிசியான் வாங்கை வென்று பட்டத்தைக் கைப்பற்றினார். ஷிசியான், கடந்த மாதம் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 6 votes total | ||

