ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி-ஜெயலலிதா


ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி-ஜெயலலிதா

image

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அஇஅதிமுக பெற்ற வெற்றி மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா  கூறியுள்ளார்.

சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தேர்தல் வெற்றி எங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல. ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. மக்களுக்கு கிடைத்த வெற்றி. திமுகவுக்கு எதிரான கோபத்தை வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

இத்தேர்தலில் பணபலம் தோல்வி அடைந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தான் நாங்கள் முதல் முன்னுரிமை தருவோம்.

ஆளுநர் அழைப்பு விடுத்த பின்னரே, நாங்கள் பதவி ஏற்கும் தேதி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று ஜெயலலிதா கூறினார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)