ஜார்க்கண்டில் ப. சிதம்பரம் அதிகாரிகளுடன் ஆய்வு
நக்ஸல் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகம் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ராஞ்சி வந்த ப. சிதம்பரம், ஜார்க்கண்ட் தலைமைச் செயலாளர் ஏ.கே. சிங், உள்துறை செயலாளர் துபிட், காவல்துறை டி.ஜி.பி நேயாஜ் அகமது உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. மாவோயிஸ்ட் தாக்குதல் உள்ள 10 மாவட்டங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் ப. சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். ஜார்க்கண்ட் ஆளுநர் எம்.ஓ.எச். பாரூக்கையும் ப. சிதம்பரம் இன்றிரவு சந்தித்துப் பேசவுள்ளார். |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

