ஜெ. நடவடிக்கைகளைக் கண்டித்து ஆக.4ல் தி.மு.க ஆர்ப்பாட்டம்


ஜெ. நடவடிக்கைகளைக் கண்டித்து ஆக.4ல் தி.மு.க ஆர்ப்பாட்டம்

image

சென்னை: அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளைக் கண்டித்து தி.மு.க இளைஞர் அணி சார்பில் வரும் 4ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று துணை முதலமைச்சரும், கட்சியின் இளைஞரணி தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், அன்றாடம் ஜெயலலிதா விடுக்கும் அறிக்கைகளில் தன்னை ஊழலற்ற ஒரு உத்தமி போலவும், அவர் மீது எந்தெந்த வழக்குகளில் எத்தகைய தீர்ப்புகள் கூறப்பட்டிருக்கின்றன என்று, தி.மு.க. தலைவர் கருணாநிதி பலமுறை சுட்டிக்காட்டியும், அதற்குப் பதில் சொல்ல வழியில்லாமல், சொத்துக்குவிப்பு வழக்கை 13 ஆண்டுகள் ஆகியும், பொய்யைச் சொல்லி வாய்தா வாங்கியே வழக்கை முடித்து வரும் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

மக்களைத் தொடர்ந்து ஜெயலலிதா அவமதித்து வரும் போக்கினை எதிர்த்தும்- நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் தலைமைக்கழக ஒப்புதலோடு, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் மு.க. ஸ்டா லின் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய-மாநில அரசுகள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி கோவையில் மிகப்பெரிய கண்டன பொதுக்கூட்டத்தைக் கூட்டிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அக்கூட்டத்திலேயே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் வகையில் பேசினார்.

மேலும், சட்டமன்ற பொதுத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்பதால், கூட்டணி எவ்விதம் அமைய வேண்டும் என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன், தொண்டர்கள் தேர்தல் பணிகளுக்குத் தயாராகுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அந்தப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா கூறியிருந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி அன்றாடம் கடிதங்களையும், அறிக்கைகளையும் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)