தமன்னா காட்டில் ஆனந்த மழை சம்பளம் 1 கோடியை தொட்டது


தமன்னா காட்டில் ஆனந்த மழை சம்பளம் 1 கோடியை தொட்டது

image தமன்னா சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படதில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமனாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது.

இதையடுத்து நடிகர் தனுசூடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் ஆகிய படங்களில் நடித்தார். கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்கள் அவருக்கு பெயர் பெற்று தந்தது.

நடிகைகள் அசின், திரிஷா இந்தி திரையுலக பிரவேசம், நயன்தார காதல் சர்ச்சை முதலியவற்றால் நடிகை தமனா தமிழ் திரைப்பட உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்.

அயன் படத்துக்கு பிறகு தமன்னாவின் மார்க்கெட் நல்ல உச்சத்தில் உள்ளது, சின்ன ஹீரோ முதல் பெரிய ஹீரோ வரை தமன்னா ரெம்ப பிசி.

இதனையடுத்து தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தி உள்ளாராம் தமன்னா. அவர் தப்போது ஒரு படத்திற்கு ஒரு கோடி சம்பளம் கேட்கிறாராம். இனி தமன்னா காட்டில் ஆனந்த மழை.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)