தமிழகத்தில் மழை குறையும்-வானிலை மையம்


தமிழகத்தில் மழை குறையும்-வானிலை மையம்

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலத்தை நோக்கி நகர்ந்து சென்று விட்டதால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை இனிமேல் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் சென்னைக்கு அருகே நீடித்து வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து ஒரே இடத்தில் நீடித்ததால், கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது.

சென்னை உட்பட மாநிலத்தின் கடலோர மாவட்டங்களிலும், உட்புற மாவட்டங்களிலும் விட்டு விட்டு கனமழை பெய்தது.

இதனால் சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், செவ்வாயன்று சென்னையில் மழை பெய்யவில்லை. மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்டது.

இதனிடையே, வங்கக்கடலில் தொடர்ந்து நீடித்து வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலத்தை நோக்கி நகர்ந்து விட்டபடியால், தமிழகத்தில் கனமழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)