தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை


தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட மீனவர்கள் உட்பட 136 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படை இன்று விடுதலை செய்தது.

யாழ்ப்பாணம் நீதிமன்றம் அனைத்து மீனவர்களையும், அவர்களின் 25 படகுகளையும் விடுவித்து உத்தரவிட்டதாகவும், அவர்கள் அனைவரையும் சர்வதேச கடல் எல்லையில் இன்று இரவு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய கடலோரக் காவல்படையினர் தமிழக மீனவர்களை பத்திரமாக கரைக்கு அழைத்து வருவார்கள் என்றும் அந்த தகவல் கூறுகிறது.

கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இலங்கை மீனவர்கள் உதவியுடன் கைது செய்த அந்நாட்டு கடற்படை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து காவலில் வைத்தது.

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் எழுந்ததைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இலங்கை வெளியுறவு அமைச்சரைத் தொடர்பு கொண்டு இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு கோரினார்.

இதையடுத்து இந்திய மீனவர்கள் 136 பேரையும் விடுதலை செய்து வெள்ளியன்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தகவலை இலங்கையில் இருந்து வெளியாகும் வலைத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)