தமிழ்த்திரையுலகினருக்கு கருணாநிதி அறிவுரை
கலை உலகினர் மத்தியில் சிறு கலகமும் விளைவித்திட முடியாமல், அனைவரும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், திரைப்படத் துறையினர் வீடு கட்டுவதற்காக 90 ஏக்கர் நிலம் வழங்கியதற்காகவும், பல்வேறு சலுகைகளை திரைத்துறையினருக்கு தாம் அளித்தமைக்காகவும் பாராட்டு தெரிவித்து அண்மையில் நடைபெற்ற விழாவில் ரஜினி, அஜீத் போன்றோர் பேசிய கருத்துகளை சிலர் அரசியலாக்க முயன்றதாகவும், ஆனால் அது இயலாமல் போனது என்றும் கூறியுள்ளார். ரஜினி இப்பிரச்சினையில் அமைதி காத்ததும், அஜீத் தம்மை நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததையும் சுட்டிக்காட்டியுள்ள முதல் அமைச்சர், கலகம் விளைவிக்க முயன்றோர் தோல்வி கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தாம் ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லாவிட்டாலும் தமிழ்த் திரையுலகினர் பல சந்தர்ப்பங்களில் பாராட்டு விழாக்களை நடத்தியிருப்பதையும் முதல் அமைச்சர் பட்டியலிட்டுள்ளார். கலைஉலகில் இனி எவரும் கலகம் விளைவித்திட முடியாது என்று கட்டுப்பாடு காப்பார்களேயானால், அந்த விழா தந்த மகிழ்ச்சியை விடவும் அதிக மகிழ்ச்சியடைவேன் என்று கருணாநிதி தமது அறிக்கையில் கூறியுள்ளார். |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

