திருப்பூர் : நொய்யல் ஆற்றில் வெள்ளம்


திருப்பூர் : நொய்யல் ஆற்றில் வெள்ளம்

image

திருப்பூரில் இது வரை இல்லாத அளவிற்குள் நொய்யலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதில் 100 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தண்ணீரில் மூழ்கின, பல வீடுகள் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டன. வெள்ள நீரில் சிக்கிய 20க்கும் மேற்பட்டோர் மாயமானதாக அஞ்சப்படுகிறது.

குழந்தைகள், பெண்கள் உள்பட 3 பேர் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். மேலும் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பருவமழை பெய்து வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 

சென்னையில் வடிகால் நிரம்பி பல்வேறு சாலை முழுவதும் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், நீலகிரி, விழுப்புரம், தஞ்சாவூர், தேனி , மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகிறது.

இந்நிலையில் திருப்பூரில் நேற்று இரவு 10 மணி முதல் பலத்த மழை விடிய, விடிய பெய்தது. கோவையில் பெய்த மழை மற்றும் மற்றும் அருகில் உள்ள குளங்கள் உடைந்ததாலும், நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெள்ளம் கரை புரண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

நொய்யல் ஆறு மிக விசாலமானதாக இருந்தது. இதன் அகலம் தற்போது குறுகிப்போனது. இரு புறமும் ஆக்கிரமித்த வீடுகள் மற்றும் சாலைகள் காரணமாக தண்ணீர் கொள்ளளவு குறையும் போது வேறு வழியில்லாமல் தண்ணீர் பொங்க வேண்டியதாகிறது.

பல்லடம் சுக்கம்பாளையம் பகுதியில் குட்டை உடைப்பு ஏற்பட்டது. இதில் தண்ணீர் புகுந்ததில் இங்குள்ள தனியார் நாட்டு கோழி பண்ணையில் இருந்த 50 நாள் கொண்ட 800 கோழிகள் தண்ணீரில் மூழ்கின.

வைகை அணை நிரம்பி வருவதால் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)