திருமலை கோயிலுக்குள் தண்ணீர் பாட்டிலுக்கு தடை


திருமலை கோயிலுக்குள் தண்ணீர் பாட்டிலுக்கு தடை

image

பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலின் மூலஸ்தான நுழைவு வாயிலுக்குள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு செல்ல தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

திரவ வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாக உளவுத்துறையினர் வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து, இந்த முடிவை திருமலை திருப்பதி தேவஸ்தானம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

என்றாலும், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டே அதிகாரிகள் இம்முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் கோயிலின் முக்கிய நுழைவு வாயிலுக்கு பின் தண்ணீர் பாட்டில்கள் இனிமேல் அனுமதிக்கப்படாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)