நீதிபதியிடன் ராசா பேசியது உண்மை - கோஹலே
புதுடெல்லி: கிரிமினல் வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் பேசியது முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாதான் என்பது உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு தெரியும் என்றும், அவருக்கு எழுதிய கடிதத்தில் ராசாவின் பெயரை தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததாகவும் நீதிபதி எச்.எல் கோஹலே தெரிவித்தார்.
நீதிபதி ரகுபதி விவகாரம் தொடர்பாக அப்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கோஹலே அனுப்பிய அறிக்கையில், எந்த மத்திய அமைச்சரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். தலைமை நீதிபதியாக இருந்தபோது ரகுபதி எழுதிய கடிதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும் பாலகிருஷ்ணன் கூறியிருந்தார். அதற்கு தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள கோஹலே பதில் அளித்துள்ளார். நீதிபதி ரகுபதியிடம் தொலைபேசியில் பேசியதாக எந்த மத்திய அமைச்சர் பெயரையும் என்னுடைய கடிதத்தில் நான் குறிப்பிடவில்லை என்றும் அந்த மத்திய அமைச்சர் யார் எனத் தெரியாது என்றும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். நீதிபதி ரகுபதியின் கடிதம் ஏற்கனவே அவரிடம் இருந்தது. அதில் 2-வது பாராவில் ராசாவின் பெயரை நீதிபதி ரகுபதி தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் என கோஹலே தெரிவித்தார். |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

