பாண்டிராஜின் தொடரும் கிராமத்து மோகம்


பாண்டிராஜின் தொடரும் கிராமத்து மோகம்

image பசங்க - படத்துக்குப் பின் நகரப் பின்னணியைக் கொண்ட கதையைத்தான் பாண்டிராஜ் இயக்க இருந்தார்.

அதற்கான சில சூழல்கள் ஒத்து வராததால்தான், கிராமத்து கதையையே மீண்டும் தேர்வு செய்திருக்கிறார்.

புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள வம்சம் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

கிராமத்துக் காதலை மையமாக வைத்து படம் உருவாகியிருக்கிறது. தாஜ் நூர் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

வாலி, முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார்கள். ஹீரோவாக அறிமுகமாகும் அருள்நிதி, சுனேனா உள்ளிட்ட நடிகர்கள் தற்போது டப்பிங் பேசி வருகின்றனர்.

ஜூலை 3-ம் தேதி பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதல் அமைச்சர் கருணாநிதி பங்கேற்று பாடல்களை வெளியிடுகிறார். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)