பால் கொள்முதல் விலையுயர்வு: தங்கபாலு பாராட்டு
பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் நடத்தி வந்த போராட்டத்திற்கு தீர்வு கண்ட முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு பாராட்டு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் குழுவினர் கடந்த 13ஆம் தேதியன்று முதலைமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்த போது, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை குறித்து பரிசீலித்து தீர்வு காண வேண்டும் என்று தாம் கேட்டுக்கொண்டதாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டதுடன், அதன் விளைவாக பால் கொள்முதல் விலையை உயர்த்தித்தர ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளதையும் அவர் அதில் கூறியுள்ளார்.
பால் உற்பத்தியாளர்களுக்கும் - அரசுக்கும் இடையே இணக்கமான சுமூகச் சூழ்நிலை
ஏற்பட்டுள்ள அதேவேளையில், பால் உபயோகிப்பாளர்கள் பாதிக்கப்படாத வகையில் பால் விற்பனை விலையும் உயர்த்தப்படவில்லை என்பது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் நடவடிக்கை என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதற்காக முதலமைச்சர் கருணாநிதிக்கும், பேச்சுவார்த்தையில் பங்கேற்று இணக்கமான சூழ்நிலை ஏற்பட பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தங்கபாலு கூறியுள்ளார். |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

