பிரபாகரனின் தாயாரிடம் இருந்து தகவல் இல்லை : கருணாநிதி


பிரபாகரனின் தாயாரிடம் இருந்து தகவல் இல்லை : கருணாநிதி

image

தமிழகத்தில் சிகிச்சை பெற விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க இயலாது என்ற கடிதம், பார்வதியிடம் இருந்து வரவில்லை என, முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சட்டசபையில் பூஜ்ய நேரத்தில், காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ் பிரபாகரனின் தாயார் பார்வதி, தமிழகத்தில் சிகிச்சை பெறுவதற்கு, முதல்வர் சிறப்பு அனுமதி பெற்றுத் தந்திருக்கிறார். ஆனால், அரசு விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்று, தமிழகம் வர அவர் விரும்பவில்லை.

அவர் இலங்கை சென்றுவிட்டார் என பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து அரசுக்கு தகவல் வந்துள்ளதா?அவர் தமிழகம் வரும்போது, அதை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் பெற திட்டமிட்டிருந்தனர்.

அவரோடு வேறு சிலரும் தமிழகம் வர திட்டமிட்டிருந்தனர். அது நடக்காததால், இலங்கைக்கு சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் பேசினார்.

இதற்கு முதல்வர் கருணாநிதி அதிகாரப்பூர்வமாகவோ, தனிப்பட்ட முறையிலோ பார்வதியிடம் இருந்து எவ்விதமான பதிலும் அரசுக்கு வரவில்லை.

உங்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள இயலாது என்ற கருத்து அமைந்த கடிதம், அவர்களால் அனுப்பப்படவில்லை. எந்த கடுமையான நிபந்தனைகளும் அவர்களுக்கு விதிக்கப்படவில்லை.

அவர்கள் அரசின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்; பாதுகாப்பு என்றால், சிறைக் கோட்டம் போன்ற பாதுகாப்பு அல்ல; ஒருவர் உடல்நலம் இல்லாமல் வரும்போது, உடலைப் பரிசோதிக்க ஏற்ற மருத்துவமனையில் அவரைத் தங்க வைத்து, அடிக்கடி கவனித்துக் கொள்கிற அந்த முயற்சிகளை மேற்கொள்ள அரசின் பாதுகாப்பில் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டது.

ஏற்கனவே தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு தொடர்பு கொள்ளவோ, தொடர்பு உள்ளவர்களோடு நட்பு கொள்ளவோ கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

ஒரு முக்கியமான பிரமுகரின் தாயார் இங்கே வந்து தங்கி இருக்கும்போது, அவர்களை பயன்படுத்தி, யாரும் இங்கே அரசியல் நடத்துவதற்கு இடம் தராத வகையில், அந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இதை, நீங்கள் ஏற்றுக் கொண்டால் தான் போச்சு; இல்லாவிட்டால் உங்களை இங்கே அனுமதிக்க முடியாது\\\' என்று கூட சொல்லவில்லை. அவர்களுக்கு ஒரு, \\\'அட்வைஸ்\\\' என்பதைப் போல, நீங்கள் இங்கே வந்து தங்குங்கள்; சிகிச்சை பெறுங்கள்.

தகுந்த மருத்துவமனையில் உங்களை அனுமதித்து, திறமையான டாக்டர்கள் மூலம் உங்கள் உடல்நிலையைப் பரிசோதித்து ஏற்ற வைத்தியங்களைச் செய்கிறோம் என்று கருணாநிதி தெரிவித்தார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)