பிரெஞ்ச் ஓபன் சாம்பியன்: 6ம் முறை வென்றா நடால்


பிரெஞ்ச் ஓபன் சாம்பியன்: 6ம் முறை வென்றா நடால்

image

பாரிஸில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் 6-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

இன்றிரவு நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரை 7-5, 7-6, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி வீழ்த்தினார்.

பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை நடால் வென்றிருப்பதன் மூலம் சுவீடன் நாட்டின் ஜோர்ன் போர்க் பெற்றிருந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

ரோலண்ட் கெரோஸ் மைதானத்தில் சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இறுதி ஆட்டம் பரபரப்பாக அமைந்தது.

ரோஜர் பெடரரும், நடாலுக்கு ஈடுகொடுத்து ஆடியது, கூடியிருந்த ரசிகர்களையும், உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் போட்டியை பார்த்தவர்களையும் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாக்கியது. 

3-வது செட்டை நழுவ விட்ட ரஃபேல் நடால், 4-வது செட்டில் சுலபமாக பெடரரை வீழ்த்தி பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

இந்த வெற்றியின் மூலம் நடால் உலக டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த வெற்றி தமக்கு மிகவும் முக்கியமான தருணம் என்று நடால் குறிப்பிட்டார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)