பெட்ரோல் விலையுயர்வு திரும்பப்பெறப்படாது - பிரணாப்


பெட்ரோல் விலையுயர்வு திரும்பப்பெறப்படாது - பிரணாப்

image

உயர்த்தப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலையை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொல்கட்டாவில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, கடந்த மாதம் 25-ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தி அரசு எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்க விகிதம் உயர்வைக் கண்டித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் என்ற பெயரில், முழு அடைப்பை 5-ம் தேதி நடத்தவுள்ளது.

இதற்கிடையே, புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, இந்திய அரசியல் வரலாற்றில் பாரத் பந்த் போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்றிருப்பது இதுவே முதல்முறையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)