போபால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வுக்கு முன்னுரிமை-காங்.
போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பதே தங்களின் தற்போதைய முன்னுரிமை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். போபால் சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும், குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகே உரிய நடவடிக்கைகள் தெரிய வரும் என்றும் அவர் கூறினார். கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ஜெயந்தி நடராஜன், மத்தியில் 6 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக அரசு, யூனியன் கார்பைடு முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவிற்கு கொண்டுவர என்ன முயற்சி மேற்கொண்டது? என வினவினார். |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

