போலி மருந்தால் பார்வை இழந்த மாணவிக்கு சிகிச்சை


போலி மருந்தால் பார்வை இழந்த மாணவிக்கு சிகிச்சை

சென்னையைச் சேர்ந்த மாணவி சுரேகா, காய்ச்சலுக்காக சாப்பிட்ட மாத்திரையால் பார்வையிழந்தார். இது பற்றி வெளியான செய்திகளை பார்த்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த மாணவிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் கிடைக்க ஏற்பாடுகள் செய்தார்.அதன்படி, சுரேகாவுக்கு ஐதராபாத்தில் உள்ள பாஸ்டோன் மருத்துவமனையில் லென்ஸ் பொருத்தப்பட உள்ளது. அங்குசெல்வதற்கு முன், தனக்கு உதவிக்கரம் நீட்டிய துணை முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற விருப்பத்தை சுரேகா தெரிவித்தார்.


இதையடுத்து, மு.க.ஸ்டாலினை நேற்று மாலை 5 மணியளவில் மாணவி சுரேகா, அவரது பெற்றோர் தேவேந்திரன், கலாவதி, சகோதரர் நவீன்குமார் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, மாணவிக்கு இதுவரை அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.ஐதராபாத்தில் சுரேகாவுக்கு மேற்கொள்ளவுள்ள சிகிச்சை நல்ல முறையில் நடைபெற வாழ்த்துகளை தெரிவித்தார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)