மக்களவையில் மகளிர் மசோதாவை எதிர்ப்பேன்-லாலு


மக்களவையில் மகளிர் மசோதாவை எதிர்ப்பேன்-லாலு

மகளிருக்கு நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய விடமாட்டேன் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் கூறியிருக்கிறார்.

பாட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லாலு பிரசாத், மகளிர் மசோதாவை நிறைவேற்றுவதில் காங்கிரசும், பாரதிய ஜனதாக் கட்சியும் அவசரம் காட்டி வருவதாகவும், அதில் உள்நோக்கம் இருப்பதாகவும் கூறினார்.

மக்களவையில் மகளிர் மசோதாவை தாக்கல் செய்ய விட மாட்டேன் என்றும், அந்த மசோதாவை கடுமையாக எதிர்ப்பேன் என்றும் லாலு பிரசாத் கூறினார்.

மகளிர் மசோதாவை தற்போதைய வடிவில் தாக்கல் செய்வதை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பதாகவும் லாலு பிரசாத் கூறினார்.

முஸ்லிம்களுக்கும், தலித்துக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் மகளிர் மசோதாவில் உள்ஒதுக்கீடு அறிவிக்க வேண்டும் என்று கூறிய அவர், மக்களவையில் இந்த மசோதாவை தாம் எதிர்க்கும் போது, அவைக்காவலர்கள் மட்டுமல்ல ராணுவமே வந்தாலும் தாம் கவலைப்படப் போவதில்லை என்றார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)