மாநில கவர்னர்களின் பதவியை காரணமின்றி பறிக்கக்கூடாது


மாநில கவர்னர்களின் பதவியை காரணமின்றி பறிக்கக்கூடாது

தகுந்த காரணமின்றி மாநில கவர்னர்களின் பதவியை பறிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

இதனால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் மாநில கவர்னர்கள் மாற்றப்படும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த கவர்னர்கள் தாமாக ராஜினாமா செய்துவிடுவார்கள். அல்லது அவர்களது பதவி பறிக்கப்படும்.

 

இந்த நடைமுறையை எதிர்த்து பா.ஜ.வை சேர்ந்த எம்.பி. பி.பி.சிங்கால் கடந்த 2004ம் ஆண்டு பொது நல வழக்கு தொடர்ந்தார். கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

 

மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியுடன் ஒத்துப்போகாதவர் என்ற காரணத்துக்காக மாநில கவர்னர்களை பதவி நீக்கம் செய்யக்கூடாது. தகுந்த காரணங்கள் இருந்தால் மட்டுமே கவர்னர் பதவியை பறிக்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)