மான்டெல் காயம்: இங்கிலாந்துக்கு பின்னடைவு


மான்டெல் காயம்: இங்கிலாந்துக்கு பின்னடைவு

image

புதுடெல்லியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டிகளில், வியாழக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான பி பிரிவு ஆட்டத்தின் போது, இங்கிலாந்து வீரர் ரிச்சர்டு மான்டெல் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டு மைதானத்தில் இருந்து தூக்கிச் செல்லப்பட்டார். அவர் இந்த தொடர் முழுவதும் கலந்து கொள்ள முடியாமல் போனதால், இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ஜேஸன் லீ கூறுகையில், இந்தத் தொடர் முழுவதும் ரிச்சர்டு மான்டெல் பங்கேற்க மாட்டார் என்றார்.

இங்கிலாந்து அணியின் தடுப்பாட்டக்காரர்களில் முக்கியமானவரான மான்டெல், பாகிஸ்தானின் பெனால்டி கார்னர் பந்தை அடிக்க முற்பட்ட போது, பாகிஸ்தான் வீரர் ஒருவருடன் மோதி மைதானத்தில் தடுமாறி விழுந்தார்.

இதில் அவரது முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக ஜேஸன் தெரிவித்தார்.

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தானை 5-2 என்ற கோல்கணக்கில் வென்றது.

இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் மான்டெல் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் பயிற்சியாளர் கூறினார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)