முத்தரப்பு கிரிக்கெட்: இலங்கையிடம் வீழ்ந்தது இந்தியா
ஹராரேயில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இந்தியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் காரணமாக இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு குறைந்துள்ளது.
ஏற்கனவே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்திருந்த இந்திய அணி, இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில், முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 268 ரன் சேர்த்தது. விராட் கோலி 68 ரன்னும், யூசுப் பதான் 44 ரன்னும் சேர்த்தனர். ரோஹித் சர்மா 32 ரன்னும், அஸ்வின் 38 ரன்னும் சேர்த்தனர். என்றாலும் இந்திய அணியின் ஸ்கோர் 268 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. இலங்கை தரப்பில் துஷாரா 3 விக்கெட்டுகளையும், ரன்தீவ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். குலசேகரா, பெரைரா, தில்ஷான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 10 பந்துகள் மீதமிருக்கையில், 48.2 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 270 ரன் எடுத்து வெற்றிபெற்றது. விக்கெட் கீப்பர் சந்திமால் 130 பந்துகளில் 111 ரன் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவர் அடித்த ரன்களில் 5 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். கபுகேதரா 42 ரன்னும், மென்டிஸ் 35 ரன்னும் சேர்த்தனர். அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், தின்டா மற்றும் ஓஜா தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர். இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்திருப்பதால், முத்தரப்பு ஒருநாள் போட்டித்தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

