ரஜினியிடம் நலம் விசாரித்தார் நரேந்திர மோடி


ரஜினியிடம் நலம் விசாரித்தார் நரேந்திர மோடி

image

முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, உடல்நலக்குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையி சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

சுவாசக்குழாய் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 

இந்நிலையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, சென்னையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். ரஜினிகாந்த் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவதற்காக தமது வாழ்த்துக்களையும் ரஜினிக்கு மோடி தெரிவித்தார்.

ரஜினிகாந்தின் குடும்பத்தினரையும் சந்தித்த மோடி, அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மோடியுடன் அவரது முதன்மைச் செயலாளர் கைலாச நாதனும் சென்றிருந்தார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)