ரஜினி, அஜீத்தை சாடிய ஃபெப்சி தலைவர்


ரஜினி, அஜீத்தை சாடிய ஃபெப்சி தலைவர்

image

திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளுமாறு சிலர் வற்புறுத்துவதாக நடிகர் அஜீத் கூறியதும், அதனை சூப்பர்ஸ்டார் ரஜினி ஆதரித்ததும் ஏற்கனவே அறிந்ததே.

ரஜினியும், அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலையே அஜீத்தும் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ள நிலையில், இருவரின் பெயர்களையும் குறிப்பிடாமல் ஃபெப்சி தலைவர் வி.சி. குகநாதன் கடுமையாக சாடியுள்ளார்.

இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய வி.சி. குகநாதன், அ‌ஜீ‌த்தையும்,  ர‌ஜினியையும் பெயர் குறிப்பிடாமல் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

எங்களை எதிர்த்தால் இவர்களை இருக்கும் இடம் இல்லாமல் செய்ய முடியும் என்று அவர் பேசியது திரையுலகினரையும்,  ர‌ஜினி, அ‌ஜீ‌த் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திரைப்பட அமைப்பு என்பது அரசியல் கட்சி என்றால் அதன் உறுப்பினர்கள் தொண்டர்கள் மாதி‌ரி. தலைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதுதான் தொண்டர்களின் கடமை. அது தெ‌ரியாமல் சிலர் விதாண்டாவாதம் பேசுகிறார்கள். இவர்களுக்கு சிலர் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றார் அவர்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)