ராஜபக்ஷே ஜூன் 8-ல் இந்தியா வருகை


ராஜபக்ஷே ஜூன் 8-ல் இந்தியா வருகை

இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஜூன் 8-ம் தேதி இந்தியா வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸும் தெஹ்ரானில் இன்று சந்தித்துப் பேசினர்.

ஜி 15 மாநாட்டுக்காக இருவரும் தெஹ்ரானுக்கு வந்துள்ளனர்.  இருவரும் சுமார் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேசியதாகவும், இச்சந்திப்பின்போது இலங்கையில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஜூன் 8-ம் தேதி இந்தியா வரத் திட்டமிட்டுள்ளதாக பெரிஸுடனான சந்திப்புக்குப் பின் எஸ் எம்.கிருஷ்ணா தெரிவித்தார். ராஜபக்ஷே, பிரதமர் மன்மோகன் சிங்கை திம்ப்புவில் நடைபெற்ற சார்க் உச்சிமாநாட்டின்போது கடைசியாக சந்தித்திருந்தார். இந்த ஆண்டு ஜனவரியில் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ராஜபக்ஷே இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)