ராம்தேவ் விவகாரம்: ஹசாரே உண்ணாவிரத அறிவிப்பு


ராம்தேவ் விவகாரம்: ஹசாரே உண்ணாவிரத அறிவிப்பு

image

தில்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து யோகா குரு பாபா ராம்தேவை காவல்துறையினர் அப்புறப்படுத்திய நடவடிக்கையைக் கண்டித்து, லோக்பால் குழுவில் இடம்பெற்றுள்ள அன்னா ஹசாரேயும், அவரது ஆதரவாளர்களும் புதனன்று உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

தமது உண்ணாவிரதத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தால், அதனை மீறி உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.

லோக்பால் மசோதா வரைவுக்குழுவில் துணைத் தலைவராக இடம்பெற்றுள்ள நீதிபதி சாந்தி பூஷன் இதுகுறித்து கூறுகையில், புதனன்று காலை 10 மணி முதல் 7 மணி வரை ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகத் தெரிவித்தார்.

ராம்தேவை அப்புறப்படுத்திய சம்பவம் ஜனநாயகப் படுகொலை என்று கூறிய அவர், அதனை எதிர்த்துப் போராடப் போவதாகவும், உண்ணாவிரதத்திற்கு அனுமதி கிடைக்காத நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்றார்.

ராம்தேவ் ஆதரவாளர்கள் யாரும் தில்லி நகருக்குள் ஒருவாரத்திற்கு போராட்டம் நடத்த அனுமதி மறுத்து தடையுத்தரவை காவல்துறையினர் பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)