வன்முறையைக் கட்டுப்படுத்த பல பிரயோகம் : ப.சிதம்பரம்


வன்முறையைக் கட்டுப்படுத்த பல பிரயோகம் : ப.சிதம்பரம்

வன்முறையைக் கட்டுப்படுத்த பலத்தை பயன்படுத்த அரசுக்கு உரிமை உண்டு என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.
பயிற்சி முடித்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்களை படையில் வீரர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.​ இதில் ப.சிதம்பரம் பேசியதாவது:
வன்முறையைக் கட்டுப்படுத்த பல பிரயோகம் செய்ய அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு.​ ஆனால்,​​ பலப் பிரயோகத்துக்கு உள்ள வரையறைகளை வீரர்கள் மதிக்க வேண்டும்.
இல்லை எனில்,​​ பலப் பிரயோகத்துக்கான நோக்கம் குறித்து மக்கள் கேள்வி எழுப்புவார்கள்.
அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும்போது பொறுமையுடனும்,​​ சாமர்த்தியத்துடனும்,​​ சரியான புரிந்துணர்தலுடனும் வீரர்கள் செயல்பட வேண்டும்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)