விஸ்வநாதன் ஆனந்துக்கு தங்கபாலு வாழ்த்து


விஸ்வநாதன் ஆனந்துக்கு தங்கபாலு வாழ்த்து

image

உலக செஸ் போட்டியில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள செய்தி விளையாட்டுத் துறையில் இந்திய நாட்டிற்கே பெருமை தரக்கூடிய சிறந்த சாதனையாகும்.

இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு புகழ் பெற்றுத்தந்த அவரது மகத்தான சாதனைக்கும், அவர் மேன்மேலும் உலகளாவிய அளவில் பல்வேறு வெற்றிகளை குவித்து பெருமை சேர்க்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் தங்கபாலு.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)